“நாளைக்கு எனக்கு கல்யாணம்; கண்டிப்பாக வந்துடுங்க” செந்தில் பாலாஜியின் அட்ராசிட்டி!!

 

“நாளைக்கு எனக்கு கல்யாணம்;  கண்டிப்பாக வந்துடுங்க” செந்தில் பாலாஜியின் அட்ராசிட்டி!!

திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி திமுகவின் வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.

“நாளைக்கு எனக்கு கல்யாணம்;  கண்டிப்பாக வந்துடுங்க” செந்தில் பாலாஜியின் அட்ராசிட்டி!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதேபோல அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பு காட்டி வரும் நிலையில், திமுக எப்படியாவது இழந்த ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்று உழைத்து வருகிறது . அந்த வகையில் அதிமுக – திமுக ஆகிய இரு பிரதான கட்சிகளும் முதல்வர் நாற்காலிக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

“நாளைக்கு எனக்கு கல்யாணம்;  கண்டிப்பாக வந்துடுங்க” செந்தில் பாலாஜியின் அட்ராசிட்டி!!

இந்நிலையில் கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்எல்ஏ செந்தில் பாலாஜி வாங்கல் , குப்பிச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார், அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் , “திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் போல் உள்ளது. பெண்களுக்கான இலவச பயணம் ,மகளிர்கான ஊக்கத் தொகை உள்ளிட்ட பல முக்கிய வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்துள்ளார். இது அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நிறைவேற்றப்படும்.நான் உங்களிடம் வாக்கு கேட்பது நாளைக்கு எனக்கு கல்யாணம் கண்டிப்பா நீங்க வந்துருங்க அப்படி என்று பத்திரிக்கை வைப்பது போல உள்ளது. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை எனக்கு வாக்களியுங்கள் ” என பேசி அனைவரையும் ஈர்த்தார். செந்தில்பாலாஜி பேச்சை கேட்டு அங்கிருந்த மக்கள் சிரித்து ஆரவாரம் செய்தனர்.