காலையில் இணைந்த ‘திமுக எம்.எல்.ஏவுக்கு’ மாலையில் சீட்.. கடுப்பில் பாஜகவினர்!

 

காலையில் இணைந்த ‘திமுக எம்.எல்.ஏவுக்கு’ மாலையில் சீட்.. கடுப்பில் பாஜகவினர்!

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவான மருத்துவர் சரவணன் இன்று காலை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த 2019ம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு, இந்த முறை போட்டியிட திமுக வாய்ப்பு தரவில்லை. அதுமட்டுமில்லாமல், அந்த தொகுதியை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்க்கு கொடுத்து விட்டது.

காலையில் இணைந்த ‘திமுக எம்.எல்.ஏவுக்கு’ மாலையில் சீட்.. கடுப்பில் பாஜகவினர்!

இதனால் கடுப்பான எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இந்த நிலையில், இன்று காலை பாஜகவில் இணைந்த சரவணனுக்கு, மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் 17 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சி தாவும் நபர்களுக்கு பதவிகள் கொடுக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். இருந்தாலும், சரவணனுக்கு சீட் கொடுத்தது பாஜகவினரை கோபமடையச் செய்துள்ளது.

காலையில் இணைந்த ‘திமுக எம்.எல்.ஏவுக்கு’ மாலையில் சீட்.. கடுப்பில் பாஜகவினர்!

தேர்தல் நெருங்க நெருங்க, பாஜகவில் ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்தது. நடிகர் ராதாரவி, நடிகை குஷ்பு, நடிகை கவுதமி, நடிகை காயத்ரி ரகுராம், நடிகர் செந்தில் என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலானோர் நட்சத்திரங்களாகவே இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஷ்புவை தவிர வேறு யாருக்குமே வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ராஜபாளையம் தொகுதியை எதிர்பார்த்து கடுமையாக உழைத்த நடிகை கவுதமிக்கு கூட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில், 17 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 3 தொகுதிகளிலாவது இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.