திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்!

நேற்றுமுதல் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக குரோம்பேட்டை ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் கடந்த 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜெ.அன்பழகனுக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து மீண்டும் அவரது உடல்நிலை நேற்றுமுதல் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை  காலமானார். முன்னதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவகுழுவுடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அன்பழகன் மறைவு திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

பக்ரித் பண்டிகை கொண்டாட ஊருக்கு சென்ற ராணுவ வீரர் மாயம்… தேடுதல் பணி தீவிரம்!

பக்ரீத் பண்டிகை தினத்தை கொண்டாடுவதற்காக ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்திற்கு சென்ற 162-வது பட்டாலியன் படை பிரிவை சேர்ந்த ரைபிள்மென் ஒருவர் மாலை 5 மணி முதல் காணாமல் போயுள்ளார். காணாமல் போன...

நாய்க்குட்டிக்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்… இதயங்களை வென்ற செயல்!

அரசாங்கம் மக்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்லுமாறு தொடர்ந்து வலுயுறுத்தி வருகிறது. பெரும்பாலான மக்கள் அதை கடைபிடிப்பதில்லை. ஆனால் சிறுவன் ஒருவன் தான் மாஸ்க் அணிந்துள்ளது மட்டுமில்லாமல் தனது மாஸ்க் அணிவித்து...

ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து

ஆளுநருக்கும், ஆளுநர் மாளிகையில் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ராஜ்பவனில் நடைபெற இருந்த சுதந்திர தின நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான...

இன்று 5,609 பேருக்கு கொரோனா… இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பட்சமாக 109 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இன்று 58,211 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5,609 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.63 லட்சத்தைக் கடந்துள்ளது. பரிசோதனை செய்யப்படுவோர்கள் மற்றும்...