‘திருச்சி 2வது தலைநகரம்’ திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை!

 

‘திருச்சி 2வது தலைநகரம்’ திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் அலுவல்கள் இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கின. பல்வேறு அரசு துறைகளில் மத்திய தணிக்கை துறை CAG மேற்கொண்ட தணிக்கை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதிவிக்காலத்தை டிச.31 வரை நீட்டிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 1%-ஐ கொரோனா 2ம் அலைக்காக செலவிட்டு வருகிறோம்; நிதி நிலை சீரானதும் முதலமைச்சரின் வாக்குறுதி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றார்.

‘திருச்சி 2வது தலைநகரம்’ திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை!

இதை தொடர்ந்து பம்பையாறு – அச்சன்கோவில் ஆறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் 2.50 லட்சம் ஏக்கர் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார் சட்டமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

‘திருச்சி 2வது தலைநகரம்’ திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கோரிக்கை!

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் எந்த பகுதிக்கும் 4 மணி நேரத்தில் சென்று வர முடியும் என்பதால் திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.