பாஜகவுக்கு தாவும் அடுத்த திமுக எம்எல்ஏ!?

 

பாஜகவுக்கு தாவும் அடுத்த திமுக எம்எல்ஏ!?

சட்டமன்ற தேர்தல் கூட்டணி பங்கீடு செய்வதிலேயே கட்சிகள் விழிபிதுங்கி நின்றன தமிழக அரசியல் கட்சிகள். இதையடுத்து கூட்டணி பங்கீடு முடிந்தாலும் தொகுதி பட்டியல், வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்த தலைவலியை சந்தித்தது திமுக – அதிமுக ஆகிய அனுபவம் மிக்க கட்சிகள். இருப்பினும் எல்லாவற்றையும் சரிகட்டிவிட்டு தேர்தல் அறிக்கை வெளியிட்டு, பரப்புரைக்கும் தயாராகியுள்ளனர் முதல்வர் வேட்பாளர்களான பழனிசாமியும், ஸ்டாலினும்.

பாஜகவுக்கு தாவும் அடுத்த திமுக எம்எல்ஏ!?

இதுவொருபுறமிக்க அதிமுக – திமுக காட்சிகளில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. அதாவது சீட் அளிக்கப்படாத முன்னாள் மற்றும் சிட்டிங் எம்எல்ஏக்கள், ‘ஆன் யுவர் மார்க்.., கெட்..செட்.., கோ’ என அணிமாற தயாராகவுள்ளனர். சீட் தராத அதிருப்தியில் இருந்த திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவணன் காலையில் கட்சி தாவி பாஜகவில் சேர்ந்த நிலையில் மாலையில் மதுரை வடக்கு தொகுதியை அவருக்கு தாரை வார்த்தது பாஜக.

பாஜகவுக்கு தாவும் அடுத்த திமுக எம்எல்ஏ!?

தினகரன் எப்படி சீட் கிடைக்காமல் அதிமுகவிலிருந்து சென்ற எம்எல்ஏ ராஜவர்மனுக்கு உடனடியாக அமமுகவின் சாத்தூர் வேட்பாளராக நிற்க்க வாய்ப்பளித்தாரோ, அதேபோல் எங்களை நம்பி வந்தவர்களை கைவிட மாட்டோம் என்ற சிக்னல் கொடுத்து ஒரு ஒரு விக்கெட்டாக இழுக்கிறது பாஜக.

பாஜகவுக்கு தாவும் அடுத்த திமுக எம்எல்ஏ!?

இந்நிலையில் பாஜகவின் இந்த அயராத முயற்சிக்கு அடுத்தடுத்து கைமேல் பலன் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது வில்லிவாக்கம் திமுக எம்.எல்.ஏ ப.ரங்கநாதன் தான் பாஜகவின் அடுத்த டார்கெட். மாநிலஅளவில் அவருக்கு வெயிட்டான பதவி வழங்கப்படும் என்ற கோரிக்கையுடன் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் காவி கூட்டத்தில் ஐக்கியமாவார் என்று தெரிகிறது. அதேபோல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வருமா? வராதா? என இலவு காத்த கிளிபோல காத்திருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணியும் பாஜக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் இதை மறுத்துள்ள அவர், யார் அழுதா? கண்ணு வேர்க்குது பாஸு என்ற ரேஞ்சுக்கு லாவகமாக சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.

பாஜகவுக்கு தாவும் அடுத்த திமுக எம்எல்ஏ!?

இந்த குதிரை பேரம் வேலையில் நாங்கள் ஈடுபடவில்லை; அதேசமயம் யாராவது எங்கள் கூட்டணியை நோக்கி வந்தால் அவர்களை நாங்கள் நிச்சயம் வரவேற்போம் என்கிறார்கள் இரட்டை இலை தரப்பினர்…! எது எப்படியோ தேர்தல் முடிவதற்குள் கட்சி தாவல்கள் என்பது தினசரி பணியாக இருக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.