“சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் பாடுபட்டார்”

 

“சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் பாடுபட்டார்”

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக அம்பேத்கர் இன்றுவரை செயல்பட்டு வருகிறார் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

“சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் பாடுபட்டார்”

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், , “ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்கு – இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்த அணையா விளக்கு டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று. சமூகம் சட்டம் கல்வி பொருளாதாரம் அரசியல் வரலாறு தத்துவம் அனைத்தும் ஒருசேர ஒருவரை அடையாளம் காட்ட முடியும் ஆனால் அது டாக்டர் அம்பேத்கர் ஆகத்தான் இருக்க முடியும். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உரிமை பெற அகில இந்திய அளவில் வழிகாட்டியாக அவர் இன்றுவரை செயல்பட்டு வருகிறார். அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை தந்து வருகிறது.

டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் , எனக்கு தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர் என்று சொன்னார்கள். மாமேதையின் நினைவாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மகளிர் கல்லூரி அமைத்தவர் கலைஞர் கருணாநிதி. அம்பேத்கர் படத்திற்கு நிதியுதவியும், அம்பேத்கர் பெயரால் விருது வழங்கினார்கள், அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை சிறப்புற நடத்தினார்கள், சுதந்திரமான மனிதர்களை உருவாக்கவே அம்பேத்கர் அவர்கள் பாடுபட்டார்கள். அத்தகைய சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயத்தை அமைக்க உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.முன்னதாக அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.