“உரிமைகளை அடமானம் வைத்த அதிமுக ” : இரட்டை தலைமையை விரட்டியடிக்க துடிக்கும் ஸ்டாலின்

“உரிமைகளை அடமானம் வைத்த அதிமுக ”  : இரட்டை தலைமையை விரட்டியடிக்க துடிக்கும் ஸ்டாலின்

மாநில உரிமைகளை அதிமுக அரசு அடமானம் வைத்து விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“உரிமைகளை அடமானம் வைத்த அதிமுக ”  : இரட்டை தலைமையை விரட்டியடிக்க துடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தலில் களமிறங்க துடித்து கொண்டிருக்கும் அதிமுக , திமுக கூட்டணி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பாஜகவை கால்பதிக்க விட கூடாது என உறுதியாக நினைக்கும் கட்சிகளே திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதனால் தான் கூட்டணி தொகுதி பங்கீட்டை கூட தியாகம் செய்யும் வகையில் இறங்கி வந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்தார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்றும் உறுதியாக நம்புகின்றனர்.

“உரிமைகளை அடமானம் வைத்த அதிமுக ”  : இரட்டை தலைமையை விரட்டியடிக்க துடிக்கும் ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய வரலாற்றில் முதன்முறையாக மாநிலக் கட்சி ஆட்சியமைத்து, பேரறிஞர் அண்ணா தமிழில் பதவியேற்ற நாள் இன்று!’தமிழ்நாடு’ பெயரும் பெற்றோம்; வளர்ச்சியும் பெற்றோம்! மாநில உரிமைகளை அடமானம் வைத்துள்ள அதிமுக ஆட்சியை விரட்டியடித்து பேரறிஞர் – கலைஞர் வழியில் ஆட்சி அமைந்திட சூளுரைப்போம்! ” என்று பதிவிட்டுள்ளார்.