“புதுச்சேரியிலும் ஜனநாயகப் படுகொலை”: திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!

 

“புதுச்சேரியிலும் ஜனநாயகப்  படுகொலை”: திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!

புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சிக்கு கவிழ்ந்தது குறித்து முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

“புதுச்சேரியிலும் ஜனநாயகப்  படுகொலை”: திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளும்கட்சி எம்எல்ஏ க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தது ஆளும் நாராயணசாமி அரசுக்கு பாதகமாக முடிந்தது.இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் நாராயணசாமி. இருப்பினும் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார் முதல்வர் நாராயணசாமி.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “திரைமறைவு பேரங்கள் – ஜனநாயகப் படுகொலையை இலட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு அதனைப் புதுச்சேரியிலும் அரங்கேற்றியிருக்கிறது – அதிகார துஷ்பிரயோகம் இது!ஜனநாயகம் காப்பதில் முதலமைச்சர் நாராயணசாமியின் துணிச்சலை வாழ்த்துகிறேன். திமுக – காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்!” என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு கிரண்பேடியை கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறித்தது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் குதிரை பெறும் நடத்தினார்கள். தமிழிசை சௌந்தர்ராஜனை துணைநிலை ஆளுநர் ஆக நியமித்த போதே உள்நோக்கத்தை கண்டித்தேன். பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளையும் ,சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி .ம் ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலை வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டில் அடிமை அதிமுகவை கைப்பாவையாக்கி ஆட்சி நடத்துவது போல , புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மூலம் மறைமுக ஆட்சி நடத்த முயற்சித்தால் நீதிமன்றத்தில் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைகளில் திமுக துணை நிற்கும். ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து திமுக -காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்” என்று கூறியுள்ளார்.