“பொய் வழக்குகளால் எங்களைத் தடுக்க முடியாது” – மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

 

“பொய் வழக்குகளால் எங்களைத் தடுக்க முடியாது” –  மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள் – திமுக கூட்டணியினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் டிராக்டர் பேரணி நேற்று நடந்தது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

“பொய் வழக்குகளால் எங்களைத் தடுக்க முடியாது” –  மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

இதையடுத்து தடையை மீறி பேரணி நடத்தியதாக போலீசார் 3 எம்எல்ஏக்கள் உள்பட 660 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்திய சுமார் 660 மீது கொரோனா காலத்தில் நோய் பரப்புதல், சட்டவிரோதமாக ஒன்று கூடியது,போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் , கொலை முயற்சி, பொது சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தம்புசாமி, திமுகவை சேர்ந்த பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த துரைராஜ் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர் ஊர்வலம் நடத்திய விவசாயிகள் – திமுக கூட்டணியினர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள்! டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி. பொய் வழக்குகளால் எங்களைத் தடுக்க முடியாது. #RepealFarmLaws! ” என்று பதிவிட்டுள்ளார்.