“தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அமைச்சர் செங்கோட்டையன்”

“தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அமைச்சர் செங்கோட்டையன்”

தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு அமைச்சர் என்றால் அது செங்கோட்டையன் என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

“தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அமைச்சர் செங்கோட்டையன்”

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின், தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு அமைச்சர் என்றால் அது செங்கோட்டையன் தான். கல்வித்துறையில் ஒரு அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் மறுநாளே அதற்கு மறுப்பு தெரிவிப்பார்” என்றார்.

“தன் துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அமைச்சர் செங்கோட்டையன்”

தொடர்ந்து பேசிய அவர், 7 ஆண்டுகளாகியும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என கூறுகின்றனர். மத்திய அரசு சாட்டை அடியாக நாள்தோறும் பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது. அசாமில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதை ஏன் தமிழகத்தில் செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.