“வெற்றியின் விளைச்சலுக்கான விழா பொங்கல்” : மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

 

“வெற்றியின் விளைச்சலுக்கான விழா பொங்கல்” : மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தமிழர் திருநாள்-தமிழ்ப்புத்தாண்டு-சமத்துவப் பொங்கல் என உற்சாகத்துடன் கொண்டாடுவோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“வெற்றியின் விளைச்சலுக்கான விழா பொங்கல்” : மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ” பண்பாட்டு படையெடுப்புகளைத் துரத்தி அடித்து-தமிழ்ப் பெருமை காத்திடும் தைப் பொங்கல், நம் விழா!தமிழர் திருநாள்- தமிழ்ப்புத்தாண்டு-சமத்துவப் பொங்கல் என உற்சாகத்துடன் கொண்டாடுவோம்! எங்கும் பொங்குக மகிழ்ச்சி! விடியலைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்!

தமிழ்நாட்டை சூழ்ந்திருக்கும் இருள் விலகி உதயசூரியன் ஆண்டாக இது அமையும். பொங்கல் விழாவினைக் பண்பாட்டு மறுமலர்ச்சி அவர் கட்டமைத்த சிறப்பு திராவிட இயக்கத்திற்கு உண்டு. பொங்கல் நன்னாள் போல இன்னொரு விழாவை காண முடியாது. பேரறிஞர் அண்ணா காலம் தொட்டே திமுகவினர் பொங்கல் விழாவை தமிழர் திருநாளாக தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் நாளும் இணைந்து கொண்டாடப்பட்டது.

“வெற்றியின் விளைச்சலுக்கான விழா பொங்கல்” : மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கிற காலக்கணக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை தொடங்கி அவரும் தலைவர் கலைஞர்தான். ஜனவரி 13 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், 14 ஆம் தேதி ஆவடி தொகுதியிலும் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்கிறேன். மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும் உதய சூரியனின் ஒளிக்கதிர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.