“திமுகவுக்கு ‘தேன்மொழி’ எம்எல்ஏனா பயமாமே?” – ஏன்? எதுக்கு?

 

“திமுகவுக்கு ‘தேன்மொழி’ எம்எல்ஏனா பயமாமே?” – ஏன்? எதுக்கு?

தமிழ்நாட்டிலேயே திமுக மிக மிக பலவீனமாக இருக்கும் ஒரு தொகுதி என்றால் அது நிலக்கோட்டை தான். தனி தொகுதியான இங்கு திமுக ஒரேயொரு முறை மட்டுமே வெற்றிவாகை சூடியிருக்கிறது. அதுவும் எப்போது என்றால் திமுக ஆட்சியைப் பிடித்த 1967ஆம் ஆண்டு தேர்தலில். அதற்குப் பின் கடந்த இடைத்தேர்தலையும் சேர்த்து அதிமுக 7 முறை வெற்றிபெற்றிருக்கிறது. ஏ.எஸ். பொன்னம்மாளின் செல்வாக்கால் காங்கிரஸ் கட்சி ஐந்து முறை வெற்றிபெற்றிருக்கிறது. சுயேச்சையாக அவர் ஒரு முறையும் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஒரு முறையும் வெற்றிபெற்றிருக்கிறார்.

“திமுகவுக்கு ‘தேன்மொழி’ எம்எல்ஏனா பயமாமே?” – ஏன்? எதுக்கு?

இதைக் காரணம் காட்டியே திமுக கூட்டணியில் ஏன் நிலக்கோட்டை காங்கிரஸுக்கு ஒதுக்கவில்லை என தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அங்கு மக்கள் விடுதலை கட்சி தலைவர் முருகவேல் ராஜன் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த இடைத்தேர்தலிலும் 2006ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி கண்ட எஸ். தேன்மொழியை மீண்டும் எடப்பாடி களமிறக்கியிருக்கிறார்.

“திமுகவுக்கு ‘தேன்மொழி’ எம்எல்ஏனா பயமாமே?” – ஏன்? எதுக்கு?

இச்சூழலில் நிலக்கோட்டையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர் தேன்மொழியை அறிமுகப்படுத்தி பேசிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், “தேன்மொழி என்றாலே திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிடும். அதனால்தான் மு.க. ஸ்டாலின், யாரும் கேள்விப்பட்டிராத ஒரு கட்சிக்குத் தொகுதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். தேன்மொழி வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டது” என்றார்.