Home அரசியல் 7.5% உள்ஒதுக்கீட்டில் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகம் - மு.க.ஸ்டாலின்

7.5% உள்ஒதுக்கீட்டில் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகம் – மு.க.ஸ்டாலின்

உள்ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் தராமல் இருப்பதாக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்றுவரை தமிழக ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் ஆளுநருக்குக் கொடுக்காமல் முதலமைச்சர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும்; அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் செய்யும் துரோகமாகும்!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், “தமிழக ஆளுநர் – முதலமைச்சர் – மத்திய பா.ஜ.க. அரசு” ஆகியோர் ஒரு ரகசியக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவையும் நீர்த்துப் போக வைத்து விடக்கூடாது என்றும் – நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மசோதாவிற்கு உடனடியாக தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டுக்காவலை கண்டித்து, அய்யாக்கண்ணு அரைமொட்டை அடித்து நூதன போராட்டம்

திருச்சி திருச்சியில் விவசாய சங்கத் தலைவர் அய்யக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து, விவசாயிகள் அரை மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘சுவரில் சாய்ந்து நின்ற பெண்’ மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

சென்னை தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள பீர்க்கங்கரணை பகுதியை...

நிவர் புயலை எதிர்கொள்ள தயாரான எடப்பாடி அரசு – துரித கதியில் மீட்பு பணிகள்!

இக்கட்டான சமயத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை வைத்தே ஒரு அரசாங்கத்தின் தரம் முடிவு செய்யப்படும். இந்த வகையில் தமிழகத்தை நெருங்கிவரும் நிவர் புயலைவிட வேகமாக மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது...

புயலினால் 3 நாட்களுக்கு புதுச்சேரியில் ஊரடங்கு !

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 9மணி முதல் 26ஆம் தேதி காலை...
Do NOT follow this link or you will be banned from the site!