முதல்வர் பழனிசாமி நீண்ட நாட்கள் வாழ வேண்டும்; ஏன் தெரியுமா? : ஸ்டாலின் அசத்தல் பேச்சு!!!

 

முதல்வர் பழனிசாமி  நீண்ட நாட்கள் வாழ வேண்டும்; ஏன் தெரியுமா? : ஸ்டாலின் அசத்தல் பேச்சு!!!

கலைஞர் இல்லாததால் திமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி  நீண்ட நாட்கள் வாழ வேண்டும்; ஏன் தெரியுமா? : ஸ்டாலின் அசத்தல் பேச்சு!!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக, திமுக கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையத்தில் திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், திமுகவை வீழ்த்த உயிரைத் தர வேண்டாம். நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து திமுக ஆட்சியை பார்க்க வேண்டும். கலைஞர் இல்லாததால் திமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அண்ணா காலத்திலிருந்தே திமுகவை அழிக்கப் போகிறோம் என பலர் கூறுகின்றனர்.எதிர்க்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த எத்தனை பேர் ஒன்று கூடி உள்ளனர். திமுகவை அழிக்க ஒருவர் கூட இன்னும் பிறக்கவில்லை; பிறக்கப் போவதுமில்லை.

முதல்வர் பழனிசாமி  நீண்ட நாட்கள் வாழ வேண்டும்; ஏன் தெரியுமா? : ஸ்டாலின் அசத்தல் பேச்சு!!!

திமுகவை வீழ்த்த எத்தனை துரோக சக்திகள் வந்தாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது ; அதை நினைத்துப் பார்க்கவும் முடியாது.தோல்வியை ஒப்புக்கொண்ட முதல்வரை பாராட்டுகிறேன்” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது, அவர்கள் பாஜக எம்.எல்.ஏ. வாக செயல்படுவார்கள். திமுக ஆட்சியில் நீர் பாசனத்திற்கு தனி அமைச்சரவை உருவாக்கப்படும் ” என்றார்.