டெல்டா பாசனத்திற்காக கல்லணையை திறந்து வைத்த அமைச்சர்கள்!

 

டெல்டா பாசனத்திற்காக கல்லணையை திறந்து வைத்த அமைச்சர்கள்!

டெல்டா பாசனத்திற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அந்த வகையில், கடந்த 12-ஆம் தேதியும் மேட்டூர் அணையை பாசனத்திற்காக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அணையின் நீர்வரத்து 892 கன அடியாக இருக்கும் நிலையில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பை கடந்து கல்லணையை வந்தடைந்தது.

டெல்டா பாசனத்திற்காக கல்லணையை திறந்து வைத்த அமைச்சர்கள்!

மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் கல்லணையை நேரில் சென்று பார்வையிட்டார். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்த பிறகு கல்லணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ரகுபதி, மெய்யநாதன், சிவசங்கர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் இணைந்து கல்லணையில் பாசனத்திற்காக திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் டெல்டா மாவட்டங்களில் ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

கல்லணை நீர் திறப்பால் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 3.5 லட்சம் ஏக்கர் நிலம் பயன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.