ஓவர் கான்பிடன்ஸில் திமுக… சுடச்சுட ரெடியாகும் ‘வருங்கால அமைச்சர்கள்’ பட்டியல்!

 

ஓவர் கான்பிடன்ஸில் திமுக… சுடச்சுட ரெடியாகும் ‘வருங்கால அமைச்சர்கள்’ பட்டியல்!

தேர்தலில் இன்னமும் பாதிக் கிணறைக் கூட தாண்டவில்லை. வரக்கூடிய கருத்துக்கணிப்புகளை வைத்தே அறிவாலய தரப்பு ஓவர் கான்பிடன்ஸில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் தொகுதிகளில் களப்பணிகள் கூட அனாதையாக விடப்பட்டதாக திமுக அனுதாபிகளே முணுமுணுக்கின்றனர். அனைவரும் படுத்துக்கொண்டே ஜெயித்துவிடுவார்கள் என்ற எண்ணமும் திமுகவினரிடையே அதிகரித்துள்ளது. விவகாரம் இப்படியிருக்கையில் தற்போது அடுத்தடுத்த கட்டத்துக்கு திமுக தாவியிருக்கிறது.

ஓவர் கான்பிடன்ஸில் திமுக… சுடச்சுட ரெடியாகும் ‘வருங்கால அமைச்சர்கள்’ பட்டியல்!

ஆம் யாரையெல்லாம் அமைச்சராகப் போடலாம், எந்த துறைகளுக்கு எந்த அமைச்சர்களைப் போடலாம் என பட்டியல் சுடச்சுட ரெடியாகி கொண்டிருக்கிறதாம் திமுக தரப்பில். தேர்தலே இன்னும் முடியவில்லை அதுக்குள்ளயா என்று கூட்டணிக் கட்சியினர் உள்ளுக்குள்ளேயே அங்கலாய்க்கிறார்களாம். ஒரு பட்டியல் இல்லை இரண்டு டீம்கள் இரண்டு பட்டியலைத் தயாரித்துவருகிறார்கள். அதுதான் ஹைலைட்டான விஷயம். ஸ்டாலின் ‘வீட்டில்’ ஒரு அமைச்சரவை பட்டியலும், ஸ்டாலின் மருமகனான சபரீசனும் ஐபேக் பிரசாந்த் கிஷோரும் சேர்ந்து இன்னொரு பட்டியலை தனித்தனியாகத் தயார் செய்கிறார்களாம்.

ஓவர் கான்பிடன்ஸில் திமுக… சுடச்சுட ரெடியாகும் ‘வருங்கால அமைச்சர்கள்’ பட்டியல்!

இதை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்ட பெரும்புள்ளிகளோ லாபம் பார்க்கும் துறைகளுக்கு எவ்வளவு கோடி கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி முட்டி மோதிக் கொண்டதை எதிர்பார்த்திராத இரண்டு டீமும் களத்தில் நிற்கும் வேட்பாளர்களிடம் டீல் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். மின்சாரம், சுகாதாரம், போக்குவரத்து, உள்ளாட்சி உள்ளிட்ட துறைகளுக்கு செம மவுசு இருக்கிறதாம். அந்தத் துறைகளுக்கு கோடிகளை அடுக்கி முன்பதிவும் நடக்கிறதாம். பசையுள்ள துறைகளுக்கு பல பேர் அடித்துக்கொள்வதால் ஏலம் முறையில் அட்வான்ஸ் போய்க் கொண்டிருக்கிறதாம். “அதுக்குள்ள என்ன அவசரம்… ஹ்ம்ம்ம் நினப்பு தான் புழப்ப கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க” என்பதே விஷயத்தைத் தெரிந்துகொண்டவர்களின் குரலாக இருக்கிறது.