‘காங்கிரஸுக்கு கடும் எதிர்ப்பு’.. திமுகவினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

‘காங்கிரஸுக்கு கடும் எதிர்ப்பு’.. திமுகவினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்து வரும் நிலையில், அதற்கு தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனை களமிறக்க திட்டமிட்ட அதிமுகவின் முடிவை எதிர்த்து, அக்கட்சி தொண்டர்கள் இன்று காலை கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘காங்கிரஸுக்கு கடும் எதிர்ப்பு’.. திமுகவினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

அந்த வகையில், புதுக்கோட்டையிலும் தற்போது போராட்டம் வெடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தொகுதி தற்போது அதிமுக வசம் இருக்கிறது. அந்த தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் தோல்வியை தழுவினார். இந்த முறையும் அங்கு காங்கிரஸ் வேட்பாளரை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளது, திமுக தொண்டர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

‘காங்கிரஸுக்கு கடும் எதிர்ப்பு’.. திமுகவினர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியபடி, ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் பங்கேற்ற திமுக தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடக் கூடாது என திமுகவினர் சொல்வது காங்கிரஸாரை ஆத்திரமடையச் செய்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.