”திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை” – கே.என்.நேரு குற்றச்சாட்டு

”திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை” –  கே.என்.நேரு குற்றச்சாட்டு

திருச்சி

திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை என தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு குற்றம் சாட்டினார்.

”திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை” –  கே.என்.நேரு குற்றச்சாட்டு

திருச்சியில், கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும், தமிழகத்துக்கு வந்து அரசு வேலைகளில் சேரலாம் என அதிமுக அரசு கொண்டு வந்த திட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோய்விட்டதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் வடமாநில இளைஞர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளார்கள் என்றும், அதனால், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.

”திமுக உறுப்பினர்களை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை” –  கே.என்.நேரு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான திட்டத்தை தி.மு.க வைத்துள்ளது என்றும், வரும் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் இதை அறிவிப்பார் என்றும் நேரு கூறினார். தற்போது சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் பேசுவதற்கு அனுமதி பெற முடியாத நிலை உள்ளதாகவும் நேரு தெரிவித்தார்.