மதுரை மண்மலைமேடு பர்மாகாலனி பகுதியில் பாரதிராஜா – விஜயலட்சுமி தம்பதியினர் மகன், மற்றும் மகளுடன் 10ஆண்டுகளாக சபரிராயன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்துவருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பணிக்கு செல்லாததுடன் நோய்வாய் பட்டிருந்த நிலையில் பாரதிராஜா கடந்த 5மாதங்களாக வாடகை செலுத்தமுடியாத நிலையில் வீட்டின் உரிமையாளர் வீட்டு வாடகை கேட்டுவந்த நிலையில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நேரில் சென்று விஜயலட்சுமியிடம் வீட்டின் உரிமையாளர் சபரிராயன் வாடகை கேட்ட நிலையில் தற்போது தர இயலாது என கூறினார். உடனடியாக சபரிராயன் தான் அழைத்துவந்த நபர்களை வைத்து வீட்டை இடித்து தள்ளினார். அப்போது வீட்டில் இருந்த விஜலட்சுமியின் மகன் விக்னேஸ்வரன் (13) என்ற சிறுவன் படுகாயம் அடைந்தார். உடனடியாக சிறுவனை மீட்ட அக்கம்பக்கத்தினர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். வீட்டு வாடகை தராத நிலையில் சிறுவனை வீட்டிற்குள் வைத்தபடி வீட்டை இடித்த உரிமையாளரை போலிசார் தேடிவருகின்றனர். வீட்டு உரிமையாளர் சபரிராயன் திமுகவில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.