மின் கட்டண உயர்வு: திமுக உறுப்பினர்களுடன் நாளை மு.க ஸ்டாலின் ஆலோனை

 

மின் கட்டண உயர்வு: திமுக உறுப்பினர்களுடன் நாளை மு.க ஸ்டாலின் ஆலோனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதானல் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானதால், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசத்திற்கு பிறகு கட்டாயமாக மக்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மின் வாரியம் அறிவித்தது. அதன் படி, மக்கள் மின் கட்டணம் செலுத்திய போது வழக்கத்தை விட இந்த முறை மின்கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால் மக்கள் வீட்டிலேயே இருப்பதால் மின் கட்டணம் அதிகமாகி இருப்பதாகவும் மக்களிடம் அதிகமாக வசூலிக்கவில்லை என்றும் மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மின் கட்டண உயர்வு: திமுக உறுப்பினர்களுடன் நாளை மு.க ஸ்டாலின் ஆலோனை

இந்த நிலையில், மின்கட்டண உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ள நாளை திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை காலை 10 மணிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக மாவட்ட செயலாளர், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடக்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.