ஜூலை 30 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; திமுக தலைமை அறிவிப்பு

 

ஜூலை 30 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; திமுக தலைமை அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாகவும் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டி வருகிறார். அதனால் ஜூலை 27 ஆம் தேதி(நேற்று) காலை 10.30 மணிக்கு காணொளி வாயிலாக திமுக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் கொரோனா மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி நேற்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது. அந்த கூட்டத்தில் அனைத்து திமுக தோழமைக் கட்சிகளும் கலந்து கொண்டன.

ஜூலை 30 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; திமுக தலைமை அறிவிப்பு

அதன் முடிவில், கொரோனவால் பாதித்த, உயிர்த்தியாகம் செய்த முன்கள வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2020ஐ திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 30 ஆம் தேதி காலை மாலை 4:30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.