ஜன. 21 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் - ஸ்டாலின் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Main



ஜன. 21 ஆம் தேதி திமுக செயற்குழுவின் அவசர ஆலோசனை கூட்டம் - ஸ்டாலின்

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

திமுக தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

 
இதுகுறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டம் ஜனவரி 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது

MKstalin


கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டிய நிலையில் திமுக செயற்குழு கூடுகிறது. கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் குறித்தும், கூட்டணி விரிசல் குறித்தும் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.