திமுகவின் நிலைப்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மதிமுக

 

திமுகவின் நிலைப்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மதிமுக

தமிழக தேர்தலை முன்னிட்டு இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இருதரப்பிலுமே இறுதிமுடிவு எட்டப்படாமல் தொடர்ந்து இழுபறியாகவே சென்றுகொண்டிருக்கிறது. அதிமுகவுக்கு பாஜக, தேமுக கூடவும், திமுகவுக்கு காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கூடவும் தொகுதி பங்கீடு இழுபறியாகவே உள்ளது.

திமுகவின் நிலைப்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மதிமுக

சட்டப்பேரவை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக – மதிமுக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மதிமுக சார்பில் மல்லை சத்யா, செந்திலதிபன், சின்னப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதிமுகவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “திமுகவின் நிலைப்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் திமுக அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கடந்த முறை எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் தற்போதும் திமுக உள்ளது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் மதிமுக உள்ளது” எனக் கூறினார்.