சென்னையில் 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை!

 

சென்னையில் 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை!

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அதேபோல் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.

சென்னையில் 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை!

குறிப்பாக தமிழக தேர்தல் முன்னிலை நிலவரத்தின்படி அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி, ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

சென்னையில் 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை!

இந்நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.சென்னையில் அண்ணா நகர் ,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, ஆர்.கே.நகர் ,எழும்பூர், துறைமுகம், கொளத்தூர், மயிலாப்பூர், பெரம்பூர், ராயபுரம் ,சைதாப்பேட்டை ,திருவிக நகர் ,தி.நகர், ஆயிரம் விளக்கு ,வேளச்சேரி, வில்லிவாக்கம், விருகம்பாக்கம் ஆகிய 16 தொகுதிகள் உள்ளன. இந்த 16 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.

சென்னையில் 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை!