ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு!

 

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய 5 கட்சிகள் களம் கண்டிருக்கும் சூழலில், திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு!

தற்போதைய நிலவரத்தின் படி திமுக 126 தொகுதிகளிலும் அதிமுக 80 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. சற்றும் எதிர்பாராத விதமாக விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மதுரை மேற்கில் போட்டியிட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னடைவை சந்தித்துள்ளனர். அந்த தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரும் பின்னடைவை சந்தித்துள்ளார். ஜெயக்குமாரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.மூர்த்தி நூற்றுக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.