“8 முறை தேர்தல் 2 முறை தோல்வி” ; ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா ஸ்டாலின்?

 

“8 முறை தேர்தல் 2 முறை தோல்வி” ; ஹாட்ரிக்  வெற்றி பெறுவாரா ஸ்டாலின்?

கொளத்தூரில் 3வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

“8 முறை தேர்தல் 2 முறை தோல்வி” ; ஹாட்ரிக்  வெற்றி பெறுவாரா ஸ்டாலின்?

தமிழகமே உற்று நோக்குவது 2021 சட்டசபை தேர்தல். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக மூன்றாவது முறையும் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக அரியணை ஏற முடியாமல் தவித்து வரும் திமுகவோ இந்த முறை எப்படியாவது முதல்வர் நாற்காலியை கைப்பற்றிவிட வேண்டும் என்றும் கடுமையாக உழைத்து வருகிறது. இந்த தேர்தலில் முதல்வர் பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓபிஎஸ் போடியிலும், திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரிலும் களம் காணவுள்ளனர்.

“8 முறை தேர்தல் 2 முறை தோல்வி” ; ஹாட்ரிக்  வெற்றி பெறுவாரா ஸ்டாலின்?

இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அயனாவரத்தில் 6வநது பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். 2011 இல் கொளத்தூர் தொகுதியில் அதிமுகவின் சைதை துரைசாமியை தோற்கடித்தார் ஸ்டாலின். 2016 இல் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி கண்டார். 1984 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 தேர்தல்களை சந்தித்துள்ள ஸ்டாலின், 2 முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுவது கவனிக்கத்தக்கது. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கலுக்கு பின் திருவாரூரில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கு திமுக சார்பில் களம் காணும் பூண்டி கலைவாணனுக்கு ஆதரவாக பரப்புரை செய்கிறார் ஸ்டாலின்.