பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்!

 

பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மூளை அறுவை சிகிச்சை டெல்லி ராணுவ மருத்துவமனை செய்யப்பட்டது. அதற்கான பரிசோதனையின் போது பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்!

அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது. மூளை அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சுய நினைவின்றி இருப்பதாக ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் கேட்டறிந்தார்!

இந்நிலையில் பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார். அவரது மகன் அபிஜித் முகர்ஜியை தொடர்புகொண்டு பேசிய ஸ்டாலின், மருத்துவக்குழு மீது நம்பிக்கை உள்ளதாகவும், அவர் குணமடைந்து நலமாக வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்