“தடுப்பூசிகளின் விலையை உயர்த்தி இருப்பது அநியாயம்” – மு.க.ஸ்டாலின்

 

“தடுப்பூசிகளின் விலையை உயர்த்தி இருப்பது அநியாயம்” – மு.க.ஸ்டாலின்

நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியம் மட்டும் யாருக்கும் எப்போதும் வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தடுப்பூசிகளின் விலையை உயர்த்தி இருப்பது அநியாயம்” – மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.முகக்கவசம், தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். நமக்கு கொரோனா வராது என்ற அலட்சியம் மட்டும் யாருக்கும் எப்போதும் வேண்டாம்.அவசியமற்ற பயணங்களை தவிர்த்து வீட்டில் இருங்கள். காய்கறி பானங்களை அருந்துங்கள்; பழங்கள் சாப்பிடுங்கள்; பதப்படுத்தப்பட்ட பொருட்களை தவிருங்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசியுள்ள அவர், “கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்பூசி மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்பது அநியாயத்திலும் அநியாயம் இல்லையா? உயிர் அனைவருக்கும் பொதுவானது தானே? தடுப்பூசி நடந்த கொள்ளைதான் இந்த வேதனையான நேரத்திலும் மேலும் துயரமான ஒன்று. வரலாற்றின் பழிக்கு ஆளாகாதீர்கள் ” என்று கூறியுள்ளார்.