“மத அரசியல் செய்தால் மக்கள் விரட்டியடிப்பர்” ஸ்டாலின் ட்வீட் !!

 

“மத அரசியல் செய்தால் மக்கள் விரட்டியடிப்பர்” ஸ்டாலின் ட்வீட் !!

அதிமுக அரசை அகற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“மத அரசியல் செய்தால் மக்கள் விரட்டியடிப்பர்” ஸ்டாலின் ட்வீட் !!

ஒட்டுமொத்த தமிழகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது . 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்ய வாழ்ந்து வரும் திராவிட கட்சிகள் இந்த முறையும் நேரடியாக களம் காண்கின்றனர். ஆனால் திமுகவில் கருணாநிதியும், அதிமுகவின் ஜெயலலிதாவும் இல்லாத முதல் சட்டசபை தேர்தல் இது என்பதால் அதிகளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முதல் முறையாக முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் களம் காண்கிறார். அதேபோல் முதல்வர் வேட்பாளரை கொண்ட தொகுதியாக எடப்பாடி தொகுதி இந்த முறை சிறப்பு நிகழ்வாக மாறியுள்ளது. இப்படி பல்வேறு சுவாரசியங்களை உள்ளடக்கிய இந்த சட்டசபை தேர்தல் இன்னும் 16 நாட்களில் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகளின் ஆர்வமாக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“மத அரசியல் செய்தால் மக்கள் விரட்டியடிப்பர்” ஸ்டாலின் ட்வீட் !!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரிசி – பருப்பு – காய்கறி என ஒவ்வொன்றும் விலையேற்றம்; விண்ணைத் தொடும் சிலிண்டர் விலை; ரூ.100-க்கு பெட்ரோல் – மக்களை வதைக்கிறது விலைவாசி!மூன்று வேளை உணவு கூட நிம்மதியாக உண்ண விடாமல் சுரண்டும் கொடூர பாஜக – அதிமுக ஆட்சியை அகற்றிடுவோம்! உரிமை மீட்க வா உடன்பிறப்பே!” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், “உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள், தமிழ்நாட்டிற்கான திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி என்று எதைச் சொல்லியும் வாக்குக் கேட்க வக்கின்றி மதத்தால் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள்! இது தமிழ்நாடு! மத அரசியல் செய்தால் மக்கள் விரட்டியடிப்பர்” என்றும் “GST, பணமதிப்பிழப்பு என சிறு, குறு தொழில்களை மொத்தமாக அழித்த பாஜக அரசுக்கு பாதம் தாங்கும் அடிமை அதிமுக ஆட்சி இது!‘எவர் எக்கேடு கெட்டால் என்ன? கமிஷனில் மட்டுமே கண்’ என சுரண்டிய எடுபிடிகள் இவர்கள்! அதிமுக – பாஜக கூட்டணியை வீழ்த்திடுவோம்! ” என்றும் பதிவிட்டுள்ளார்