கொரோனாவை விரட்ட முதல்வருக்கு ஸ்டாலின் தரும் ஆலோசனைகள்!

 

கொரோனாவை விரட்ட முதல்வருக்கு ஸ்டாலின் தரும் ஆலோசனைகள்!

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடியதாகவும், அவர்களின் ஆலோசனைகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதாலேயே முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவை விரட்ட முதல்வருக்கு ஸ்டாலின் தரும் ஆலோசனைகள்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ கட்டமைப்புகள் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடும் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழக அரசே முடிவுகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சமூகப் பரவல் இல்லை என்பது குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்புகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்பினை குறைக்க முடியும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். கொரோனா மருத்துவக் கொள்கை வகுத்து அனைத்து மாவட்டங்களில் பரவலை தடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், (next) மருத்துவர், செவிலியர், ஆக்சிஜன், படுக்கை விகித விவரங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். (next) கொரோனா மருத்துவக் கழிவுகளை அறிவியல் ரீதியில் அழித்தல் வேண்டும் என்றும், பிற நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் தடையின்றி சிகிச்சைப்பெற தனி செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.