” ஸ்டாலின் சொல்றாரு ; முதல்வர் செய்கிறாரு” : ரஜினி போல் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின்

” ஸ்டாலின் சொல்றாரு ; முதல்வர் செய்கிறாரு” : ரஜினி போல் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின்

தேர்தல் பரப்புரையில் போது ரஜினி வசனத்தை மேற்கோள் காட்டி விருத்தாசலத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக – திமுக கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரையின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். அதை தொடர்ந்து முதல்வர் பழனிசாமி தேர்தலுக்கு முன்பே விவசாயக்கடனை தள்ளுபடி செய்தார்.இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வதை தான், எடப்பாடி பழனிசாமி செய்துவருவதாக அக்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.

” ஸ்டாலின் சொல்றாரு ; முதல்வர் செய்கிறாரு” : ரஜினி போல் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “அனைத்து துறைகளிலும் அதிமுக ஊழல் செய்து வருகிறது. ஊழலில் திளைக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. அடுத்து அமைய உள்ள திராவிட முன்னேற்ற கழக ஆட்சி உங்கள் குறைகளை தீர்க்கும் அரசாக அமையும். என்னை நம்பி நீங்கள் உங்கள் குறைகளை எழுதி கொடுத்துள்ளீர்கள். திமுக என்றால் நம்பிக்கை” என்றார்.

” ஸ்டாலின் சொல்றாரு ; முதல்வர் செய்கிறாரு” : ரஜினி போல் வசனம் பேசிய மு.க.ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், “ரஜினிகாந்த் சொன்னதுபோல ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்; அதேபோல் ஸ்டாலின் சொல்கிறாரு , முதலமைச்சர் செய்கிறாரு” என்றார்.