திராவிட பள்ளியை திறந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

 

திராவிட பள்ளியை திறந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திராவிட பள்ளியை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திராவிட பள்ளியை திறந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பெரியாரின் 142 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பெரியாரின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலின் அண்ணாசாலை அருகே உள்ள பெரியார் சிலைக்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்று மரியாதை செலுத்தினார்.

திராவிட பள்ளியை திறந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் திராவிட பள்ளியை காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்துள்ளார். திராவிட இயக்க வரலாற்று சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல திராவிட பள்ளி திறக்கப்பட்டுள்ளது என்றும் இணைய மற்றும் அஞ்சல் வழியே திராவிட இயக்க வரலாறு, கோட்பாடு ,சாதனைகளை மாணவர்களுக்கு கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.