“கதாநாயகனை” இன்று களமிறக்கும் திமுக : கைகொடுக்குமா ஸ்டாலின் போடும் கணக்கு!!

 

“கதாநாயகனை” இன்று களமிறக்கும் திமுக : கைகொடுக்குமா ஸ்டாலின் போடும் கணக்கு!!

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

“கதாநாயகனை” இன்று களமிறக்கும் திமுக : கைகொடுக்குமா ஸ்டாலின் போடும் கணக்கு!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அத்துடன் தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுமுதல் தொடங்கியது. சனி, ஞாயிறு தவிர மார்ச் 19ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுகவை பொறுத்தவரையில் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர், முக ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

“கதாநாயகனை” இன்று களமிறக்கும் திமுக : கைகொடுக்குமா ஸ்டாலின் போடும் கணக்கு!!

இந்நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது. ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் மக்களின் குறைகளைத் தீர்த்துவைப்பேன், கல்விக்கடன் ,விவசாயக் கடன் தள்ளுபடி , குடும்பத்தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை, மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலை ஒழிப்பு உள்ளிட்ட அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை அறிவித்தார். இந்த சூழலில் இன்று வெளியாகும் தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.