10ஆம் வகுப்பில் 95% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற பழங்குடி மாணவிக்கு ஸ்டாலின் உதவி!

 

10ஆம் வகுப்பில் 95% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற பழங்குடி மாணவிக்கு ஸ்டாலின் உதவி!

பொள்ளாச்சி அருகே பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவி கேரளாவில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 95% மதிப்பீடு பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பூச்சகொட்டாம்பாறை எனும் பழங்குடியினர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவி ஸ்ரீதேவி. கேரளா மாநிலம் சாலக்குடியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த மார்ச் மாதம் எழுதப்பட்ட பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், ஸ்ரீதேவி அதிகபட்ச மதிப்பீடு ஆன A+ கிரேட் எடுத்து தேர்ச்சி பெற்றார். இதனால் அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்ததோடு தேர்ச்சிபெற்ற ஸ்ரீதேவிக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

10ஆம் வகுப்பில் 95% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற பழங்குடி மாணவிக்கு ஸ்டாலின் உதவி!

இந்நிலையில் உடுமலைப்பேட்டை, பூச்சிகொட்டாம்பாறையை சேர்ந்த பழங்குடியின மாணவி ஸ்ரீதேவியிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். வனப்பகுதி மக்களுக்காக மருத்துவராகும் அவரது கனவை வாழ்த்தி, கல்வி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கினார்.