வேளாங்கண்ணி ஆலய நிலத்தை அபகரித்த புகாரில் திமுக பிரமுகர் கைது; அதிமுக அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேளாங்கண்ணி ஆலய நிலத்தை அபகரித்த புகாரில் திமுக பிரமுகர் கைது; அதிமுக அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

புனித வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சொந்தமான நிலம் உட்பட அரசு நிலங்களை போலீ ஆவணங்கள் மூலம் அபகரித்துக்கொண்டதாக எழுந்த புகாரின்பேரில் திமுக பிரமுக தாமஸ் ஆல்வா எடிசன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி, போலீசார் மற்றும் அதிமுக அமைச்சரை கண்டித்து ,நாகையில் திமுக கட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேளாங்கண்ணி ஆலய நிலத்தை அபகரித்த புகாரில் திமுக பிரமுகர் கைது; அதிமுக அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசு மற்றும் கோவில் நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கூறி நாகை மாவட்டம் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் மீது அதிமுக நாகை நகரச் செயலாளர் தங்க கதிரவன் நில அபகரிப்பு போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் நேற்று திமுக பிரமுகர் தாமஸ் ஆல்வா எடிசன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து இன்று திமுக கட்சி சார்பில் நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாங்கண்ணி ஆலய நிலத்தை அபகரித்த புகாரில் திமுக பிரமுகர் கைது; அதிமுக அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அவுரித்திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுக கட்சியை சேர்ந்தவர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் மீது பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டித்தும், பொய் வழக்கு போட அழுத்தம் கொடுக்கும் அதிமுக அமைச்சர் ஓ. எஸ். மணியன் மற்றும் நகர செயலாளர் தங்ககதிரவன் ஆகியோரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நில அபகரிப்பு தொடர்பான கைது மற்றும் போராட்ட விவகாரம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.