எகிறி அடிக்கும் எடப்பாடி – திகைத்து நிற்கும் திமுக

 

எகிறி அடிக்கும் எடப்பாடி – திகைத்து நிற்கும் திமுக

தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை முதலில் ஆரம்பித்தது என்னவோ திமுகதான். ஆனால் அந்த கட்சியை விட கொஞ்சம் லேட்டாக பிரச்சாரத்தை ஆரம்பித்த அதிமுக, லேட்டஸ்டாக எல்லா விஷயங்களிலும் முன்னணியில் இருப்பதை பலரும் ஒத்துக்கொள்கின்றனர்.

’விடியலை நோக்கி.., ஸ்டாலினின் குரல்’ என்கிற பிரச்சார இயக்கத்தை ஒரு மாதத்திற்கு முன்பே திமுக தொடங்கிவிட்டது. மூத்த நிர்வாகிகள் சிலர் ஒப்புக்கு மைக் பிடித்தாலும் உதயநிதி, கனிமொழி, தயாநிதிமாறன் என கருணாநிதி குடும்ப வாரிசுகள்தான் இந்த பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்குத்தான் முக்கியத்துவமும் தரப்படுகிறது.

எகிறி அடிக்கும் எடப்பாடி – திகைத்து நிற்கும் திமுக

இது தவிர ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற பெயரில் ஸ்டாலினே களமிறங்கி ஆங்காங்கே ’மக்கள் கிராமசபை’ கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆட்சி அதிகாரத்தில் இல்லாத திமுகவினரிடம் மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

எகிறி அடிக்கும் எடப்பாடி – திகைத்து நிற்கும் திமுக

இப்படி பெரும் பொருட்செலவில் திமுக அதகளம் செய்துகொண்டிருக்க, அதிமுக சார்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்புதான் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் முதல்வர் எடப்பாடி. அவரது கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும், இப்போதைய பிரச்சாரத்தையும் கவனிப்பவர்களுக்கு ஒரு உண்மை வெளிப்படையாகத் தெரியும். முன்பு எடப்பாடிக்கு திரண்ட கூட்டத்தில் ஐம்பது சதவீதம் அழைத்துவரப்பட்டவர்கள். ஆனால் இப்போதைய பிரச்சாரத்தில் தானாக திரளும் கூட்டமே மிக அதிகமாக உள்ளது.

எகிறி அடிக்கும் எடப்பாடி – திகைத்து நிற்கும் திமுக

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் எள் போட்டால் எண்ணை ஆகும் அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து பிரிவினரும் எடப்பாடியைக் கண்டும், அவரது பேச்சைக் கேட்டும் ஆர்ப்பரித்தனர். ‘’ இவரைப் பார்த்தால் முதலமைச்சர் மாதிரி இல்லீங்கோ. எங்களில் ஒருவர் மாதிரியில்ல இருக்கிறாரு’’ என்பதாகவே பலரும் கொங்கு தமிழில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

எகிறி அடிக்கும் எடப்பாடி – திகைத்து நிற்கும் திமுக

பிரச்சார நிகழ்ச்சிகளில் ஹைவோல்டேஜில் எடப்பாடி திமுகவை எகிறி அடிப்பது அந்த கட்சியினரை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. ’’ திமுகவை சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றை விரைந்து விசாரிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இவர்கள் அனைவரும் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி’’ என்கிற எடப்பாடியின் நெத்தியடி பேச்சை மக்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

எகிறி அடிக்கும் எடப்பாடி – திகைத்து நிற்கும் திமுக

அதுபோலவே ‘’ சொந்த சகோதரன் (அழகிரி) மீது அக்கறையில்லாத ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மீது எப்படி அக்கறை இருக்கும்?’’ என்கிற கேள்வி, கூடியிருந்தவர்களின் மனங்களில் ஆழமாக ஊடுருவியது என்றே சொல்ல வேண்டும். இப்படி செல்லும் இடமெல்லாம் ஸ்கோர் பண்ணும் எடப்பாடியின் பிரச்சாரத்திற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவது என்பது தெரியாமல் தடு