தமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக!

 

தமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய காட்சிகளாக பார்க்கக்கூடிய அதிமுக – திமுக கட்சிகள் இந்த தேர்தலிலும் நேருக்கு நேர் களம் காண்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயூஎம்எல், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இதில் ஐயூஎம்எல் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, விசிக ஆகிய கட்சிகளுக்கு மட்டும் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த திமுக!

இந்நிலையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு மார்ச் 6ஆம் தேதி வருமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு திமுக தலைமை ஒரே ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடிவு செய்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக 178 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும், கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளை ஒதுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.