darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு

kamal
kamal

சென்னை: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பிதழ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாந்தி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அதனையடுத்து அவருக்கு கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்கும் பணிகள் நடைபெற்று வந்தனர். இதற்கான சிலை உருவாக்கும் பணியானது திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடந்து வந்தது.

தற்போது அந்த பணிகள் நிறைவடைந்து, அவரின் சிலை அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல், ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளும் வரும் 16-ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

இந்நிலையில், சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக அழைப்பிதழ் அனுப்பியுள்ளது. ரஜினி மற்றும் கமல் இருவரும் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதால் இந்த விழாவில் அவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

2018 TopTamilNews. All rights reserved.