“ராமாதஸை இழிவுபடுத்தும் திமுக” : கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்ச்சியா?

 

“ராமாதஸை இழிவுபடுத்தும் திமுக” : கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்ச்சியா?

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் பாமகவை முரசொலி நாளிதழ் விமர்சித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தனியாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்ட பாமக, கடந்த 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. தொடர்ந்து அதிமுக அரசை குற்றம் சாட்டி வந்த பாமக மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பெரும்பாலானவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சட்டமன்ற தேர்தலிலும், மக்களவை தேர்தலில் இருந்த கூட்டணியே நீடிப்பதாக அதிமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இதை உறுதி செய்யும் நோக்கில், நேற்றுமுன்தினம் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி இருவரும் தைலாபுரத்தில் உள்ள பாமக இல்லத்திற்கு சென்று தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

“ராமாதஸை இழிவுபடுத்தும் திமுக” : கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்ச்சியா?

இதனால் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாமக கூட்டணி உறுதியாகியுள்ளதை திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் முரசொலி பத்திரிக்கையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமதாஸ் குறித்தும் வன்னியர்களின் இட ஒதுக்கீடு குறித்தும் விமர்சித்து கட்டுரை ஒன்று வெளியானது.

“ராமாதஸை இழிவுபடுத்தும் திமுக” : கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்ச்சியா?

அதில் பாமக நிறுவனர் ராமதாஸின் கார்ட்டூனுடன், “இத்தனை நாட்களாக வன்னிய இன மக்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடிய நீங்கள் இப்போது திமுக தலைவர் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போது கூறிய மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவது குறித்து திமுக ஆட்சிக்கு வந்ததும் அது குறித்து சட்ட விதிமுறைகளை பின்பற்றி பரிசீலனை செய்யும் என கூறியதை ஏற்காது. உங்கள் கட்சியின் ஆதரவை அதிமுகவுக்கு தந்தீர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அன்று கூறியதை ஏற்க மறுத்து நீங்கள் இன்று அதே உள் ஒதுக்கீட்டை கேட்பது ஏன்? வன்னிய இன மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து எந்தக் கட்டத்திலும் பின்வாங்க மாட்டேன் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புகூட சூளுரைதீர்களே இன்று பின்வாங்குவது ஏன்? வன்னிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்பதற்காக சட்ட சிக்கல் ஏற்படாமல் அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் சேர்த்து 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார் கலைஞர்.

“ராமாதஸை இழிவுபடுத்தும் திமுக” : கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்ச்சியா?

இட ஒதுக்கீடு போரில் அதிமுக ஆட்சியில் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானோர் குடும்பங்களுக்கு 13 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். அன்றைய லட்சம் இன்றைய மதிப்பீட்டில் கோடிகளை தொடும் என்பதையும் எண்ணிப் பாருங்கள். அப்படி உயிர் தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளாக அங்கீகரித்து அவர்களது குடும்பங்களுக்கு பென்ஷன் அளிக்கப்பட்டதும் வன்னிய சொத்துக்களை பாதுகாக்க வன்னியன் நல வாரியமும் திமுக ஆட்சியில் கலைஞரால் வழங்கப்பட்டது.ஆனால் அதிக ஆண்டு காலம் இந்த நாட்டை ஆண்டதாக கூறி வரும் அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு என்ன செய்தார்கள். இந்த பல ஆண்டு கால ஆட்சியில் பல முறை நீங்கள் அவர்களுடன் கூட்டணி வைத்தீர்கள். உங்கள் மகன் அன்புமணிக்கு எம்பி பதவி வாங்கியதை தவிர வன்னிய இன மக்களுக்கு அதிமுக ஆட்சியில் பெற்றுத்தந்தது என்ன கொஞ்சம் பட்டியலிட்டு காட்டுங்களேன்! கடந்த தேர்தலுக்கு முன் இனி பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காது. தனித்தே தேர்தலை சந்திக்கும் அன்புமணி தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தார்கள். அதிலாவது இன்னும் உறுதியோடு இருக்கிறீர்களா? உங்களது பதிலுக்கு காத்திருக்கும் இரண்டாவது நாள்” என்று குறிப்பிட்டுள்ளது.

“ராமாதஸை இழிவுபடுத்தும் திமுக” : கூட்டணிக்கு ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்ச்சியா?

இதை கண்ட வன்னியர் சமுதாய மக்கள் , ராமாதாஸ் இடஒதுகீட்டு கோரிக்கையிலிருந்து பின் வாங்குவதற்கே திமுக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் பாமகவுடன் திமுக கூட்டணி அமைக்க திட்டமிட்ட நிலையில் அது தோல்வி அடைந்ததால் பா.ம.க மீது சேற்றை வாரி இறைப்பதாக கூறி வருகின்றனர்.