மீண்டும் தனிச்சின்னம் கோரிக்கை; குழப்பத்தில் தி.மு.க

 

மீண்டும் தனிச்சின்னம் கோரிக்கை; குழப்பத்தில் தி.மு.க

சட்ட மன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக மனித நேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதனால் தி.மு.க கூட்டணியில் மீண்டும் தனிச்சின்னம் குறித்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

மீண்டும் தனிச்சின்னம் கோரிக்கை; குழப்பத்தில் தி.மு.க

தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளை தி.மு.க தனது சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வருகிறது. கடந்த தேர்தல்களிலும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை தி.மு.க தங்களது சின்னத்தில் போட்டியிட வைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட ம.தி.மு.க., தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்தது, ஆனால் இறுதி நேரத்தில் வேறு வழியின்றி தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டது.

மீண்டும் தனிச்சின்னம் கோரிக்கை; குழப்பத்தில் தி.மு.க

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரத்தில் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டது அதே சமயம் வி.சி.க தலைவர் திருமாவளான் சிதம்பரத்தில் தி.மு.கவின் சின்னத்தில் போட்டியிட மறுப்பு தெரிவித்து தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ம.தி.மு.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தன.

மீண்டும் தனிச்சின்னம் கோரிக்கை; குழப்பத்தில் தி.மு.க

அதைத் தொடர்ந்து ஸ்டாலின் யாரையும் தி.மு.க சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்க போவதில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், ஏற்கனவே ஹதராபாத்தை சேர்ந்த ஒவைசி கட்சியை தி.மு.க பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு கொடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்த மனித நேய மக்கள் கட்சி தற்போது, தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

மீண்டும் தனிச்சின்னம் கோரிக்கை; குழப்பத்தில் தி.மு.க

இதனால், தி.மு.க கூட்டணியில் மீண்டும் தனிச்சின்னம் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. தங்களுக்கு வேண்டிய சீட்டுகளை பெறுவதற்காகவே இக்கட்சிகள் தனிச்சின்னம் கோரிக்கையை வலியுறுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். அதே சமயம் கூட்டணி கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் 200 இடங்களில் போட்டி என்ற இலக்கிற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற குழப்பத்தில் தி.மு.க உள்ளது. இதனால், தி.மு.க கூட்டணியில் உச்ச கட்ட குழப்பம் நீடித்து வருகிறது.