தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் : டிடிவி தினகரன்

 

தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் : டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெட்ரோல் விலை 100ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 100 ஐ தாண்டியுள்ளது. சென்னையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.97.69ஆகவும், டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ.91.92ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் : டிடிவி தினகரன்

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இப்படி உயர்ந்து கொண்டே செல்வதால், விலைவாசியும் உயர்ந்தபடியே இருக்கிறது.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதையெல்லாம் உணர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

பெட்ரோல், டீசலுக்கான மாநில அரசின் வரியைக் குறைப்போம்’ என்று தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை தி.மு.க அரசு நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.