50 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ்க்கு 25 இடங்களை கொடுத்த திமுக!

 

50 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ்க்கு 25 இடங்களை கொடுத்த திமுக!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. கூட்டணி உறுதி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை உறுதியான நிலையில், தொகுதி பங்கீடு சுமூக நிலையை எட்டவில்லை, திமுக -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகள் கேட்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைமை கடிதம் அனுப்பியது. ஆனால் காங்கிரஸ்க்கு குறைவான இடங்களே திமுக கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

50 தொகுதிகள் கேட்ட காங்கிரஸ்க்கு 25 இடங்களை கொடுத்த திமுக!

இதனிடையே தொகுதி உடன்பாடு குறித்து திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 25 இடங்களும், இந்திய கம்யனிஸ்டு கட்சிக்கு 7 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு 7 இடங்களும், மதிமுகவுக்கு 6, விடுதலை சிறுத்தை கட்சிக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மனித நேய மக்கள் கட்சி 2, கொமதேக 2, தமிழக வாழ்வுரிமை கட்சி-1 இடங்கள் வரை ஒதுக்கபடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.