செப்.9 இல் கூடுகிறது திமுகவின் பொதுக்குழு… பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு!

 

செப்.9 இல் கூடுகிறது திமுகவின் பொதுக்குழு…    பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு!

செப்டம்பர் 9-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அப்போது பொருளாளராக கட்சியின் மூத்த நிர்வாகி துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நவம்பரில் நடைபெற்றது.

செப்.9 இல் கூடுகிறது திமுகவின் பொதுக்குழு…    பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு!

இதையடுத்து திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் மறைந்த நிலையில் அவரின் பொதுச் செயலாளர் பதவி துரைமுருகனுக்கு அளிக்கப்பட்டு பின் நீக்கப்பட்டது. இதையடுத்து திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்து கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

செப்.9 இல் கூடுகிறது திமுகவின் பொதுக்குழு…    பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு!

இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் மு க ஸ்டாலின் தலைமையில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது. இதில் கழக பொது உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பொதுச் செயலாளர் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

செப்.9 இல் கூடுகிறது திமுகவின் பொதுக்குழு…    பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு!

கட்சியின் பொதுச்செயலாளராக திமுகவின் பொருளாளராக உள்ள துரைமுருகன் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும், பொருளாளர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, எ. வ. வேலு ஆகியோர் பெயர் பரிந்துரை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.