திமுக முன்னாள் மாவட்டக் கழகசெயலாளர் எல்.பலராமன் கொரோனாவால் மரணம்!

திமுகவின் மாவட்ட நிர்வாகம் வடசென்னை மற்றும் தென் சென்னையாக இருந்த போது, வட சென்னையின் திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் எல். பலராமன் (78). திமுக வில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட சமயம் ஏற்பட்ட பிளவின் போது, வட சென்னையை கட்டிக்காத்தவர்களுள் முக்கியமானவர் இவர். சில நாட்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் கடந்த 19 ஆம் தேதி இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸால் அவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் தயாநிதிமாறன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தயாநிதிமாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் வடசென்னை மாவட்டக் கழகசெயலாளரும், தணிக்கை குழு உறுப்பினருமான அருமை அண்ணன் எல்.பலராமன் அவர்களின் மறைவு என்பது கழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Most Popular

‘இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’.. மாணவர்கள் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே...

கமலா ஹாரீஸ் போட்டியிட புது சிக்கல்! – பிரச்னையை பெரிதாக்கும் ட்ரம்ப்

நவம்பரில் அமெரிக்காவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஆயத்த வேலைகளை அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார்.  ஜனநாயக் கட்சியின்...

“என் பொண்ணோட சுத்தாதே ,அவளோட பேசாதே “-மகளின் ஆண் நண்பரை அடித்து காயப்படுத்திய போலீஸ் அதிகாரி.

உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் உள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய மகளின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கி காயப்படுத்தி ,சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டு மாநிலத்தில் ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் டீனேஜ்...

வேளாங்கண்ணியில் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் : பக்தர்களுக்கு அனுமதி உண்டா?

புனித ஆரோக்கிய மாதா பிறந்த நாள் விழா இந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள்...
Do NOT follow this link or you will be banned from the site!