நாங்க என்ன டம்மி பீசா?” – குமுறும் திமுக நிர்வாகிகள்

 

நாங்க என்ன டம்மி பீசா?” – குமுறும் திமுக நிர்வாகிகள்

திமுகவில், முதன்மைச் செயலாளர் கே.என் நேருவுக்கு எதிரான கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ‘’ எல்லாவற்றிற்கும் நேருதான் என்றால் அப்ப நாங்க எல்லாம் டம்மி பீசுகளா?’’ என மூத்த நிர்வாகிகளிடையே கொதிப்பு நிலவுகிறது.

நாங்க என்ன டம்மி பீசா?” – குமுறும் திமுக நிர்வாகிகள்


திருச்சி மாவட்ட செயலாளராக இருந்த நேரு ஒரே இரவில் திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டபோதே கட்சிக்குள் முணுமுணுப்பு கிளம்பியது. ‘’ சீனியர்கள், கட்சிக்காக கஷ்டப்பட்ட பலர் இருக்கும்போது நேருவுக்கு ஏன் இந்த திடீர் முக்கியத்துவம்?’’ என பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தலைமையின் ஆசியுடன் நேரு அடுத்தடுத்து பாய்ச்சல் காட்ட, இந்த அதிருப்தி அதிகமானது. கொங்கு மண்டலத்தில் பிரச்சனை என்றாலும், தென்மாவட்டங்களில் கோஷ்டி பூசல் என்றாலும் அங்கெல்லாம் நேருவே அனுப்பி வைக்கப்பட, மற்ற நிர்வாகிகளிடம் அனல் வீசத் தொடங்கியது. அறிவாலயத்தில் இதுவரை ராஜதர்பார் நடத்திவந்த ஆர்.எஸ் பாரதி, டி.ஆர் பாலு, டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாங்க என்ன டம்மி பீசா?” – குமுறும் திமுக நிர்வாகிகள்


குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக தென் மாவட்ட திமுகவை தனது ஆளுகைக்குள் வைத்திருந்த துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி இந்த விஷயத்தில் ரொம்பவே அப்செட் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
‘’முன்னேயெல்லாம் கன்னியாகுமரியில் இருந்து மதுரை வரை ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் ஐ.பியிடம்தான் தலைவர் ஆலோசனை கேட்பாரு. ஆனால் நேரு வந்த பிறகு ஐ.பியை சுத்தமா கண்டுகொள்வதில்லை. சமீபத்திய தேவர் பூஜை நிகழ்ழ்சியிலும் ஐ.பியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நேருதான் முன்னாடி நிண்ணாரு. ஐ.பியும் அவரோட பையன் செந்தில்குமாரும் கட்சிக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க. மாநாடு, பொதுக்கூட்டங்கள் என அள்ளி இறைச்சிருக்காங்க. சொந்த மாவட்டமான திண்டுக்கல்லை திமுக கோட்டையா மாற்றியிருக்காங்க. இப்படிப்பட்டவங்களை தலைமை புறக்கணிப்பது சரியல்ல’’ என்கிறார்கள் ஐ.பி ஆதரவாளர்கள்.

நாங்க என்ன டம்மி பீசா?” – குமுறும் திமுக நிர்வாகிகள்


ஆனால் நேரு தரப்பினரிடம் இது பற்றி விசாரித்தால் வில்லங்கமான செய்திகள் வெளிவருகின்றன. ‘’ தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை ஆரம்ப கட்டத்தில் எல்லா பிரச்சனைகளும் ஐபி வசம் ஒப்படைக்கப்பட்டது உண்மைதான். ஆனால் தலைமையின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர் செயல்படவில்லை. கட்சியினரிடமே கல்லா கட்டியது தலைமைக்கு தெரிந்துபோய்விட்டது. அதிலும் குறிப்பா நான்குனேரி இடைத் தேர்தலின்போது அங்கு பொறுப்பாளரா நியமிக்கப்பட்டிருந்த ஐ.பி பெருந்தொகையை சுருட்டிட்டாரு. இதை அங்கு வேட்பாளராக போட்டியிட்ட காங்கிரசின் ரூபி மனோகரனே ஸ்டாலின் கிட்ட போட்டு கொடுத்திட்டாரு. இதற்கப்புறம்தான் ஐ.பிக்கு இறங்குமுகம் ஆரம்பிச்சிது. இதற்கு நேரு என்ன செய்ய முடியும்?’’ என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.