அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் தப்பிக்கும் திமுக நிர்வாகி..பாலியல் புகாரில் சிபிஎம் குற்றச்சாட்டு

 

அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் தப்பிக்கும் திமுக நிர்வாகி..பாலியல் புகாரில் சிபிஎம் குற்றச்சாட்டு

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வீடியோ எடுத்து வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகி இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு அமைச்சருக்கு வேண்டியபட்டவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டி இருக்கிறது.

அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் தப்பிக்கும் திமுக நிர்வாகி..பாலியல் புகாரில் சிபிஎம் குற்றச்சாட்டு

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட திருவட்டார் ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் திமுகவினர் என்பதால் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளார்கள். ஆளுங்கட்சி மாவட்ட அமைச்சருக்கு வேண்டியவர் என்பதாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டிய கம்யூனிஸ்ட் கட்சியினர், காவல்துறையினர் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவர் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அந்த திருமண தகவல் மையத்தை ஜெபர்சன் என்பவர் நடத்தி வந்தார். வேலை செய்து கொண்டிருந்த போது அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த ஜெபர்சன், அந்த பெண் மயங்கி விழுந்ததும் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார். அப்போது அதை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் தப்பிக்கும் திமுக நிர்வாகி..பாலியல் புகாரில் சிபிஎம் குற்றச்சாட்டு

பின்னர் பல்வேறு சமயங்களில் இந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணை அடைத்து வைத்து தனது நண்பர்களுக்கும் அந்தப் பெண்ணை விருந்தாக்கி இருக்கிறார்.

நாகர்கோவில் என்ஜிஓ காலனியில் உள்ள ஒரு வீட்டில் அந்த பெண்ணை அடைத்து வைத்து இருக்கிறார். அவரது நண்பர்களும் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன், திருவட்டார் ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட் கென்சிலின் ஜோசப், கலிஸ்டர் ஜெபராஜ் உள்ளிட்ட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். அங்கிருந்து தப்பிய அந்தப் பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் தப்பிக்கும் திமுக நிர்வாகி..பாலியல் புகாரில் சிபிஎம் குற்றச்சாட்டு

இதையடுத்து 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார் . வழக்கு பதிவு செய்தாலும் யாரையும் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில் ஜெபர்சன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் போலீசார் அவர்களை கைது செய்யாமல் இருந்து வந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி கைது செய்ய வலியுறுத்தி இருக்கிறது.