திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்தவரின் மகனுக்கு சீட் மறுப்பு – நன்றி மறந்தாரா ஸ்டாலின்?

 

திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்தவரின் மகனுக்கு சீட் மறுப்பு – நன்றி மறந்தாரா ஸ்டாலின்?

இந்திய வரலாற்றில் ஒரு கட்சியின் சின்னம் மாற்றப்படாமல் அதே சின்னத்துடன் பல தேர்தலை எதிர்கொண்ட கட்சி என்றால் அது திமுக தான். அச்சின்னம் உதயசூரியன் தான். இப்படியாகப்பட்ட பாரம்பரியமான உதயசூரியன் சின்னம் அண்ணாவால் மட்டுமே உருவாக்கப்பட்டது அல்ல. அதற்கு கோவிந்தசாமி என்பவரின் பங்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.

திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்தவரின் மகனுக்கு சீட் மறுப்பு – நன்றி மறந்தாரா ஸ்டாலின்?

திமுகவில் இணைவதற்கு முன்னர் உழவர் கட்சி என்ற பெயரில் நடத்திவந்தார். அக்கட்சியின் சின்னம் தான் உதயசூரியன். 1957ஆம் ஆண்டு இயக்கமாக இருந்த திமுக அரசியல் கட்சியாக உருவெடுத்தது. அப்போதைய தேர்தலில் பங்கேற்றது. அச்சமயத்தில் கோவிந்தசாமி கட்சியில் இருந்ததால் தன் கட்சியின் உதயசூரியன் சின்னத்தைக் கொடுக்க முன்வந்தார். அப்படி வந்தது தான் உதயசூரியன். திமுக சார்பில் சட்டப்பேரவைக்குள் நுழைந்த முதல் எம்எல்ஏவும் கோவிந்தசாமி தான். இதில் அண்ணாவின் பங்கு என்ன இருக்கிறது என்று தோன்றலாம்.

கோவிந்தசாமி உழவர் கட்சியைத் தொடங்குவதற்கு முன் வன்னியர் குல சத்திரியர் என்ற பெயரில் கட்சியை நடத்திவந்தார். அதன்பின் ராமசாமி என்பவருடன் இணைந்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற கட்சியைத் தோற்றுவித்தார். இவர் திமுகவில் ஐக்கியமாக, ராமசாமி காங்கிரஸுக்குள் நுழைந்தார். இதனால் ராமசாமி கட்சியைக் கலைக்க முற்பட்டார். அந்தச் சமயத்தில் கோவிந்தசாமிக்கு அண்ணா ஒரு ஐடியா கொடுத்தார். கட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேறு பெயரையும் வேறு சின்னத்தையும் வாங்க கோவிந்தசாமியிடம் யோசனை சொல்ல அப்படி உருவானது தான் உழவர் கட்சியும் உதயசூரியன் சின்னமும். அச்சின்னத்தில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற பின்னாளில் அதுவே திமுகவின் அழிக்க முடியாத சின்னமாக மாறிவிட்டது. இது வரலாறு.

திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்தவரின் மகனுக்கு சீட் மறுப்பு – நன்றி மறந்தாரா ஸ்டாலின்?

இப்போது நிகழ்காலத்திற்கு வருவோம். கோவிந்தசாமியின் மகன் முகையூர் சம்பத். முகையூரில் செல்வாக்கான நபர். தற்போது இவர் பாஜகவில் இணையும் முடிவை எடுத்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “21 ஆண்டுகளாக கட்சியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் என் தந்தைக்கு மணிமண்டபம் கட்டுவதாக வாக்குறுதி அளித்தனர். தற்போதைய திமுக தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து சொல்லப்படவில்லை. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதைக் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் வேறு வழியில்லாமல் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் பாஜகவில் இணைகிறேன்” என்றார்.

திமுகவுக்கு உதயசூரியன் சின்னம் கொடுத்தவரின் மகனுக்கு சீட் மறுப்பு – நன்றி மறந்தாரா ஸ்டாலின்?

சம்பத்துக்கு இதுவரை வாய்ப்பே கொடுக்கவில்லை என்று கேட்டால் கொடுக்கப்பட்டிருக்கிறது. முகையூரில் 1989, 1996ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். அதன்பின் பொன்முடியால் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் 2006ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட சீட் கேக்க தலைமை பாமகவுக்கு ஒதுக்கியது. இதனால் கடும் அதிருப்தியடைந்த சம்பத்தின் ஆதரவாளர்கள் திமுக கொடிக்கம்பத்தையும் அறுத்து எறிந்ததும், கருணாநிதியின் படத்தை கொளுத்தியதும் வரலாறு.

சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்த பின் தேமுதிகவில் இணைந்தார். அங்கு ஒரு மாதம் கூட இல்லாமல் மீண்டும் திமுகவுக்குள் வந்தார். அப்போதும் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. தற்போதும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதால் பாஜகவுக்குத் தாவும் முடிவை எடுத்துள்ளார்.