திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடுகிறது!

 

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடுகிறது!

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடுகிறது!

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து தி.மு.க தலைமை அறிவித்தது. தேர்தல் அறிக்கை குழுவில் டி. ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ,கனிமொழி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் டி.கே.எஸ் இளங்கோவன், பேராசிரியர் அ. ராமசாமி ஆகியோரும் தேர்தல் அறிக்கைக் தயாரிப்புக் குழுவில் உள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று கூடுகிறது!

இன்று காலை 9 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கையை எப்படி தயாரிக்கலாம்? என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.