‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ : திமுக தேர்தல் பரப்புரை வீடியோ வெளியீடு!

 

‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ : திமுக தேர்தல் பரப்புரை வீடியோ வெளியீடு!

சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் பரப்புரை வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ : திமுக தேர்தல் பரப்புரை வீடியோ வெளியீடு!

அந்த வீடியோவில், ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பு, நீட் தேர்வால் அனிதா மரணம், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சேலம் எட்டு வழிச்சாலை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, வேலைவாய்ப்பு பிரச்சனை, விவசாயிகள் போராட்டம், ஊழல் மற்றும் லஞ்சம், மொழி திணிப்பு, சிலைகள் அவமதிப்பு உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இதற்கு எல்லாவற்றுக்கும் காரணம் தவறான நபர்களுக்கு ஓட்டுப் போடுவது தான் என்றும் ஓட்டு கடமை அல்ல உரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், “அதிமுக அரசால் கிராமம் முதல் நகரம் அவரை அனைத்தும் சிதைந்து விட்டது. அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற குற்றப்பத்திரிகையுடன் திமுக நிர்வாகிகள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றுவார்கள். அதிமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் ஆன்லைன் மூலம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்க வேண்டும்” என தெரிவிக்கிறார். இந்த வீடியோ திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்திலும் திமுகவின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.