வரும் 26ஆம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்!

 

வரும் 26ஆம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 26 ஆம் தேதி 12 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 26ஆம் தேதி திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்!

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 26-1-2021 செவ்வாய்க்கிழமை பகல் 12.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.